முகப்பரு வராமல் தடுப்பது எப்படி?

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (18:34 IST)
இளம் வயதின
முகப்பரு வராமல் தடுப்பது எப்படி?
ர் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை முகப்பரு என்பதும் முகப்பருவுக்கு பல்வேறு சிகிச்சையை எடுத்து வருகின்றனர் என்பது தெரிந்தது. இந்த நிலையில் முகப்பரு வராமல் தடுப்பதற்கும் வந்தவுடன் அதை நீக்குவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். முதலாவதாக ஒரு முகப்பரு வந்தாலும் அதை கிள்ளிவிடக்கூடாது, அவ்வாறு கிள்ளினால் அதிகமாக பருக்கள் தோன்றும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முகப்பரு வருவதற்கு தவறான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மன அழுத்தமே முக்கிய காரணம் என்றும் முகப்பரு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் நமது சருமத்தை பராமரிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அடிக்கடி நெற்றியில் முகப்பரு வருகிறது என்றால் ஜீரண சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம் என்றும் அதேபோல் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேற்ற வெளியேறாமல் இருந்தாலும் முகப்பரு வரும் என்றும் கூறப்படுகிறது.
 
சாப்பிடும் உணவு பண்டங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால் முகப்பருவை முகப்பரு வராமல் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
எண்ணெயில் செய்யப்பட்ட உணவுப் பொருளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதனால் முகப்பருவை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்