செவி திறனை பாதிக்கும் இரைச்சல்

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (19:27 IST)
தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.

 
பொதுவாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் 50 முதல் 60 டெசிபல் அளவு சத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணம், அரசியல் கூட்டம், கோவில் திருவிழா ஆகிய நேரங்களில் சராசரியாக 90 முதல் 95 டெசிபலும் அதற்கு அதிகாமான இரைச்சல் உள்ளது. 
 
60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் தொடர்ந்து கேட்கும்போது நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது. 
 
ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும் தன்மை குறைவது போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.
 
நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம் என்று முன்பு கருதப்பட்ட மும்பையில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளட்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்