இதய ஆரோக்கியத்தை பொருத்தவரை, பல ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டு வருகிறது.
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என்றும் கூறப்படுகிறது.
இதில் ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளதால், இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் இதயத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்த எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருப்பதால், இதனை பயன்படுத்துவது இதய நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பண்புகள் கடுகு எண்ணெயில் உள்ளதாக கூறப்படுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதுடன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.