மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

Mahendran
வியாழன், 21 நவம்பர் 2024 (18:55 IST)
தொடர்ந்து இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், மூட்டு நோய் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

செரிமானத்தை மேம்படுத்துவது, அஜீரணத்தை தீர்ப்பது, புண்களை குணமாக்குவது, மலச்சிக்கலை நீக்குவது மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகளில் இருந்து குணமடைய உதவுவது ஆகியவை இஞ்சியின் முக்கியமான மருத்துவ குணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இஞ்சி பெரிதும் உதவுகிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இயற்கை வலி நிவாரணியாக செயல்படவும் உதவும். மேலும், உடலில் உருவாகும் கழிவுகளை அகற்றும் தன்மை இஞ்சியில் உள்ளது. ரத்தம் கட்டியாகும் நிலையை இஞ்சி தடுப்பதுடன், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

இஞ்சியின் மற்றொரு முக்கிய பயனாக உடல் எடையை கட்டுப்படுத்தும் திறன் என்று கூறப்படுகிறது. மேலும் இஞ்சி இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. உடல் பொழிவை மேம்படுத்தி, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும், இளமையாக நீடிக்கவும் இஞ்சி துணைபுரிகிறது.

எனவே, இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்