அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமா?

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (14:35 IST)
அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் ரீதியான குறைபாடு ஏற்படுவது உண்மைதானா என தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
ஒரு சிலர் டயட்டை பின்பற்றுகின்றேன் என்ற பெயரில் அதிகம் பால், பழம், ஓட்ஸ், ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வர். இவை அனைத்திலும் இயற்கையாகவே சர்க்கரையின் தன்மை அதிகமாக இருக்கும். 
 
இதை தவிர்த்து ஒரு சிலரோ காபி, டீ போன்றவற்றில் அதிகம் சர்க்கரை பயன்படுத்துபவர்களாகவும், அதிக அளவில் இனிப்புகள் உட்கொள்கின்றவர்களாக இருப்பர். இப்படி அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம். 
 
ஆம், அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே அளவான அளவிலான சர்கரையை மட்டும் பயன்படுத்துங்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்