இதயத்தை குளிர்விக்கும் ஜிகர்தண்டா

Webdunia
ஜிகர்தண்டா என்றால் ஒரு குளிர்பானம். ஹிந்தியில் ஜிகர் என்றால் இதயம் தண்டா என்றால் குளிர். அதனால்தான் இதற்கு (இதயத்தை குளிர்விக்கும் பானம்) ஜிகர்தண்டா என்று பெயர்.



இதை அருந்தும் போது ஜெல்லி போன்ற தன்மை உள்ளதால் நாவில் சுவையை கூட்டுகிறது. ஒரு கப் அருந்தினால் போதும் சாப்பிட்ட திருப்தி ஏற்படும். இதில் சேர்க்கப்படும் சைனாகிராஸ் அயோடின், கால்சியம், இரும்புச் சத்து நிறைந்தது. இத்துடன் மருத்துவ குணங்கள் நிறைந்த கடல்பாசியும் கலந்து செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், வயிற்றுக்கு மிகுந்த குளிரிச்சியையும் தரக்கூடியதாக உள்ளது. ஜிகிர்தண்டா இன்று உலகமெங்கும் பார்சல் செய்து அனுப்பப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜிகர்தண்டாவை அனைவரும் வீட்டில் செய்து உண்டு மகிழ்வீர்.
அடுத்த கட்டுரையில்