அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா? இதோ உங்களுக்காக ஐந்து டிப்ஸ்கள்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (06:59 IST)
கண்ணை இமை காப்பது போல பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு பழமொழியே உள்ளது. எனவே கண்ணை காக்கும் இமையை அழகாக வைத்திருக்க வேண்டியதும் ஒரு அவசியம். சிலர் இமைகளின் அழகுக்காகவே சில ஆயிரங்கள் செல்வு செய்து வருகின்றனர். நம்முடைய இரண்டு கண்களையும் பாதுகாக்கும் இமைகளானது அழகாகவும் வசீகரமாகவும் இருக்க தரமற்ற கண்மைகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வசீகரப்படுத்துவது எப்படி என்று தற்போது பார்ப்போம்



 


கண் இமைகளை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. வைட்டமின் E காப்ஸ்யூல்களில் இருந்து கிடைக்கும் ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சியில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும் இந்த மருந்தில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் அவை கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்கி அழகுக்கு அழகு சேர்க்கும்

2. ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் ஈமு எண்ணெய் ஆகிய இரண்டைய்ம் எடுத்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதை தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நைசாக நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதில் உள்ள இயற்கையான உயர் கொழுப்பு அமிலங்கள் கண் இமை முடியை வலுவாக்கும்

3. குறைந்த அளவில் பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், படுக்கைக்கு செல்லும் முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவி வந்தால் நன்கு அடர்த்தியான கண் இமை முடிகள் கிடைக்கும்.

4. நாள்தோறும் எளியவகை கண் இமைகளை மசாஜ் செய்வதாலே போதும். இமைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே நம்முடைய விரல்களில் ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.

5. விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து, தினமும் இரவில் சில துளிகளை எடுத்து கண் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.
 
அடுத்த கட்டுரையில்