தாய்ப்பால் சுரக்க உதவும் அக்குபஞ்சர்!!

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (10:43 IST)
பத்துமாதம் கருவில் குழந்தையை சுமந்து பாடுபட்டு பெற்றெடுத்து அக்குழந்தை அழும் பொழுது பாலூட்ட முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் ஏராளம்.

 
 
ஆம் பிரசவம் முடிந்தவுடன் எல்லா பிரச்சினைகளும் முடிந்துவிடுவதில்லை, பெற்ற குழந்தைக்கு பாலூட்ட முடியவில்லையே என கண்ணீர் விடும் தாய்மார்கள் ஏராளம். அதற்கு முக்கிய காரணம் தாய்ப்பால் சுரக்காமல் போவது. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியின்றி வளர்ந்து பின்நாளில் பலமிழந்தவர்களாக காணப்படுகின்றனர். 
 
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அக்குபஞ்சரில் தீர்வு உண்டு. தாய்பால் சுரக்காமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு அதில்... 
 
(1). ஹார்மோன்களின் சமநிலையின்மை 
(2). சரிவிகித உணவு உண்ணாமை 
(3). அதிக மன கவலை 
(4). கற்பகால மருந்துகள் 
 
போன்ற பல காரணங்களில் தாய்பால் சுரக்காமல் போக வாய்ப்பு உள்ளது. இது போன்ற எந்த காரணம் இருந்தாலும் அக்குபஞ்சர் எனும் மருந்தில்லா மருத்துவத்தால் தாய்பால் சுரக்க வைக்க முடியும். 
 
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ 7 முறை கடிகார சுற்றும் 7 முறை எதிர் கடிகார சுற்று முறையில் அழுத்தம் கொடுப்பது எளிய முறையில், தாய்பால் சுரக்காமைக்கு சிறந்த தீர்வளிக்கும். 
 
அக்குபஞ்சர் புள்ளிகள்: SI 1, SI 3, SP 6, CV 17, P 6 
 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்










 
 
 
 
 
 
 
அடுத்த கட்டுரையில்