தமிழ் திரையுலகில் ரசிகைகளின் மனதை ஒரு காலத்தில் கட்டிப்போட்டிருந்த ‘மேடி’ என்னும் ‘மாதவன்’ நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச் சுற்று திரைப்படம் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார்.
இறுதிச் சுற்று திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்று பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இறுதிச் சுற்று வெற்றியால் மாதவன் ஹேப்பியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மாதவனின் டப்ஸ்மேஷ் வீடியோ ஒன்று கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளிவந்தது. இறுதிச் சுற்று வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் மேடியின் ரசிகை, ரசிகர்கள் அந்த டப்ஸ்மேஷ் வீடியோவை பகிர்ந்தும், லைக், மற்றும் கம்மெண்ட் செய்தும் வருகின்றது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.