இந்தியாவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது என்று சொல்லப்படுகின்றது. ஆனால், அதே சமயம் சிறுபான்மை சமுதாய மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்று இந்து அமைப்புகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில், நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே சென்றால், சமுதாயம் அழிந்துவிடும். எனவே, சமுதாயம் மற்றும் இந்திய கலாச்சாரம் நிலைத்திருக்க ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், "குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர்களுக்குள் பொதுவான ஒரு பந்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இரண்டு சகோதரர்கள் வேறுபட்டு இருந்தாலும், அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். நமது கலாச்சாரம் வீட்டில் இருந்து தான் வருகிறது. எனவே, கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது அவசியம்" என்றும் அவர் கூறினார்.