ஆதார் எண்ணை இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்காவிட்டால் என்னவாகும் தெரியுமா??

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:59 IST)
அனைத்து துறைகளும் தற்போது ஆதார் எண் பெறுவதை கட்டாயமாக்கி வருகிறது. முதலில் மத்திய, மாநில அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வந்தது. 
 
இதையடுத்து செல்போன் எண், இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி கணக்கு உள்ளிடவையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது. 
 
இந்நிலையில், இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை 2017 டிசம்பர் 31க்குள் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடுவதற்குள் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் என்னவாகும் என்பதை பற்று தெரியுமா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்....
 
# இன்சூரன்ஸ் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் முதிர்வடைந்தும் பாலிசி தொடர்ந்து செயல்படும். ஆதார் எண்ணை சமர்ப்பித்த பிறகே பணத்தினை பெற முடியும்.
 
# மருத்துவக் காப்பீடு: ஆதார் இணைப்பினை செய்யாமல் மருத்துவ செலவிற்கான பணத்தினை பெற முடியாது. மருத்துவ காப்பீடுக்கு ஆதார் இணைப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
# பொதுக் காப்பீடு திட்டங்களுகும் இந்த விதிகள் பொருந்தும். மத்திய அரசு சட்டத்தின் கீழ் காப்பீடு திட்டங்களை பெறும் போது பான் மற்றும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்