ஃபேஸ்புக் மூலம் இலவச இணைப்பு; பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

திங்கள், 20 நவம்பர் 2017 (16:10 IST)
ஃபேஸ்புக் மூலம் பதிவு செய்தால் ஒருமாத வாடகைக் கட்டணம் இலவசம் என புதிய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.


 

 
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்படுகிறது.
 
இந்நிலையில் தற்போது புதுவிதமான சலுகையை புது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றின் பி.எஸ்.என்.எல் பக்கம் சென்று அங்கு வழங்கப்படுள்ள Book Now என்பதை க்ளிக் செய்து அதன்மூலம் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒருமாத வாடகை கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் உள்ள பி.எஸ்.என்.எல் பக்கத்திற்கு சென்று அங்குள்ள Book Now என்பதை க்ளிக் செய்தால். பி.எஸ்.என்.எல் இணையதள பக்கத்திற்கு செல்லும். அதில் லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் எப்.டி.டி.எச் ஆகிய 3 இணைப்புகளுக்கு பதிவு செய்யலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்