ஜியோ விளைவு: சலுகைகளை கேட்கும் வோடோபோன்!!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (21:41 IST)
ஜியோவின் இலவச போன் ஏற்படுத்த இருக்கும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி சிறப்பு சலுகைகளை வழங்க வோடோபோன் கேட்டுக் கொண்டுள்ளது. 


 
 
ஜியோ தொடர்ந்து மலிவு விலை சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. வோடோபோனின் வருவாய் 3.41% சரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் இந்த இலவச போனும் டெலிகாம் நிறுவனங்களின் வருவாயினை மேலும் குறைக்கும் என வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இதனால், Universal Service Obligation கட்டணத்தை 5% இருந்து 3% குறைக்கவும், வட்டித் தொகை மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என வோடோபோன் கோரிக்கை விடுத்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்