கடன் சுமையில் டாடா பவர் நிறுவனம் – வெளிநாட்டு சொத்துகளை விற்க திட்டம் !

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (15:37 IST)
டாடா பவர் நிறுவனம் வெளிநாடுகளில் எதிர்பார்த்த அளவுக்குப் பயன் தராததால் அவற்றை விற்க முடிவு செய்துள்ளது.

டாடா பவர் நிறுவனம் ஜாம்பியா, தென் ஆப்பிரிக்கா, ஜார்ஜியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பூடான், கிழக்கு ரஷ்யா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இவற்றில் இருந்து போதுமான வருமானம் கிடைக்காததால் அவற்றை விற்க முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டாடாவின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா ‘ வெளிநாடுகளில் உள்ள எங்கள் கிளைகள் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. அதனால் அவற்றை விற்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 2500 கோடி ரூபாய் நிதித் திரட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்