ஐபோன் விற்பனையில் லாபம் பெறும் சாம்சங்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (17:28 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் X ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் சந்தையில் விற்பனையாக உள்ள நிலையில் சாம்சங் நிறுவனமும் லாபம் ஈட்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஸ்மார்ட்போன் உலக சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முதலிடத்தை பிடிக்க வெகு காலமாக போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X விற்பனையில் இரண்டு நிறுவனங்களும் லாபம் ஈட்ட உள்ளனர்.
 
ஐபோன் X ஸ்மார்ட்போனில் இரண்டு சாம்சங் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. சாம்சங் பேட்டரி மற்றும் OLED டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையாகும் ஒவ்வொரு ஐபோன் X போனிலிருந்து சாம்சங் நிறுவனத்துக்கு பங்கு செல்லும். 110 டாலர் அதாவது இந்திய ரூபாய் படி ஒரு ஸ்மார்ட்போனுக்கு 7,220 ரூபாய் ஆகும். 
 
இதன்மூலம் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் சேர்ந்து ஐபோன் X ஸ்மார்ட்போன் மூலம் லாபம் ஈட்ட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்