சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் கேலக்ஸி C7 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ததது. துவக்க விலையாக ரூ.27,990 இது விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.3090 வரை விலை குறைப்பு செய்யப்பட்டது. தற்போது மீண்டும் 2500 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், பேடிஎம் வலைத்தளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ.2500 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கேலக்ஸி ரூ.22,400க்கு C7 Pro விற்கப்படுகிறது.