கசிந்த விலை விவரம்: விரைவில் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ!!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (17:38 IST)
வரும் 15 ஆம் தேதி ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
 
தற்சமயம் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 15-ம் தேதி துவங்குகிறது.
 
இந்தியாவில் ரியல்மி 6 ப்ரோ விலை ரூ.13,999 எனவும், ரியல்மி 6 ரூ. 9,999 எனவும் நிர்ணயிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்