துவரம் பருப்பு விலை அதிவேக உயர்வு

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (17:03 IST)
பருவ மழை குறித்த நேரத்தில் பெயாத காரணத்தால் துவரம் பருப்பு உற்பத்தி இந்தியாவில் குறைந்து வருகிறது, இதனால், அதன் விலை சந்தைகளில் அதிவேகத்தில் உயர்ந்தது வருகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் துவரம் பருப்பு விலை கிலோவுக்கு 50 ரூபாய் அளவுக்கு மார்க்கெட்டில் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூபாய் 170ல் இருந்து ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. உயர்தர பருப்பு ரூபாய் 210 ஆகவும் விற்கப்படுகிறது.
 
துவரம் பருப்பைப் போலவே உளுத்தம் பருப்பும் ஒரு கிலோ ரூபாய் 180க்கும், பாசிப்பருப்பு ருபாய் 130க்கும், கடலை பருப்பு ரூபாய் 75க்கும் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.வெளிநாடுகளில் இருந்து பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அது இந்திய பருப்புகளைப் போல ருசியாக இருப்பதில்லை என்பது பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

துவரம் பருப்பு விலை இனி குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் சில வியாபாரிகள். இதனால், சில கடைகளில் சாம்பர்க்கு பதில் சட்னி மட்டும்தான் தருவாதக கடைகளில் சாப்பிடுவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.