கிட்னாப்பர் ஆம்னி: விடைகொடுத்த மாருதி!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:48 IST)
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி ஆம்னி உற்பத்தியை 2020 ஆம் ஆண்டோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. 
 
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனி இடத்தை பிடித்திருந்த மாருதி ஆம்னி 1984 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
கால் டாக்ஸி, சரக்கு வாகனம், குடும்பத்திற்கான வாகனம் என மாருதி ஆம்னி பல வகைகளில் உருமாற்றம் அடைந்தது. குறிப்பாக சினிமாக்கலில் கடத்தலுக்கு சிறப்பாக பயன்படுத்தபட்டது. கடத்தல் வண்டி என்றால் ஆம்னிதான் என்ற நிலையில் இருந்த காலம் உண்டு. 
 
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு தர மதிப்பீடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. அவற்றை மாருதி ஆம்னி பூர்த்தி செய்ய இயலாது என்பதால் இந்த முடிவுக்கு மாருதி சுசுகி நிறுவனம் வந்திருக்கிறது.
 
அதாவது, எதிர்காலத்திற்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களை ஆம்னி கொண்டில்லாத காரணத்தினால், ஆம்னி வண்டிகளின் தயாரிப்பை நிறுத்துவதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்