விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ஆஃபர்!!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (19:24 IST)
விமானச் சேவை அளிக்கும் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தனது விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ஆஃபர் ஒன்றை அளித்துள்ளது.


 
 
சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் 9W 569 விமானத்தில் கர்பிணி பெண் ஒருவர் பயணித்தார். 
 
விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்த போது அந்தப் பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டு விமானத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.
 
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால், அந்த குழந்தைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானத்தில் பயணிக்கும் சலுகையை அளித்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்