கிரெடிட் லிமிட் என்றால் என்ன? கிரெடிட் கார்ட் லிமிட்டை குறைப்பது சிறந்ததா?

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (15:08 IST)
இப்போதெல்லாம் மாத சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே கிரெடிட் கார்ட் என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், பலர் இந்த கிரெடிட் கார்ட்டை சரியாக பயன்படுத்த தெரியாமல் கடனாலியாக மாறிவிடுகின்றனர். 
 
கிரெடிட் கார்ட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல், கிரெடிட் லிமிட்டை குறைத்து விட்டால் அதிகம் செலவு செய்ய மாட்டோம் என நினைத்து கிரெடிட் லிமிட்டை குறைக்கின்றனர். உண்மையில் இது சிறந்ததா? என பார்ப்போம்...
 
கிரெடிட் லிமிட் என்றால் என்ன? 
கிரிடிட் கார்டு லிமிட் என்பது ஒவ்வொரு மாதமும் கிரிடிட் அட்டையை பயன்படுத்தி கூடுதல் வட்டி கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதுதான். 
 
இந்த லிமிட் உங்களின் சம்பளம், பணியின் வகை, கடன் வரலாறு, திருப்பி செலுத்தும் திறன் ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு வங்கியால் நிர்ணயிக்கப்படும். 
 
பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிக கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும். 
 
கிரெடிட் கார்ட் லிமிட்டை குறைப்பது சிறந்ததா? 
கிரெடிட் கார்ட் லிமிட்டை குறைப்பது சிறந்தது அல்ல அதிக கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணிற்கான குறியீடு. இது நல்ல பண மேலாண்மைக்கான குறியீடு.
 
எனவே, கிரெடிட் வைத்திருப்பவர்களின் நோக்கம் கிரெடிட் கார்ட் லிமிட்டை உயர்த்துவதாகதான் இருக்க வேண்டுமே தவிர குறைப்பது சிறந்த ஆலோசனை அல்ல. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்