டிசம்பர் 26 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

திங்கள், 3 டிசம்பர் 2018 (13:38 IST)
வங்கிகள் இணைப்பிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று  வங்கிகளையும் ஒரே வங்கியாக இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.. இந்த வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு நடத்துகிறது.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கூறியது ‘வங்கிகளை இணைக்க முடிவு செய்துள்ள அரசும் வங்கிகளும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றிற்கு எதிராக இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறோம். எங்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தனித்தனி யூனியனை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்வார்கள்’ என அறிவித்துள்ளது.

இந்த மூன்று வங்கிகளும் அதிகளவில் வாராக்கடனில் சிக்கியுள்ளதாகவும் இவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக இவற்றை மாற்ற முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்