இட்லி தோசை மாவு மூலம் ரூ.60 கோடி வருமானம்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (17:24 IST)
2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐடி பிரெஷ் புட் நிறுவனம், இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை செய்து சுமார் ரூ.60 கோடி வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.


 

 
கேராளவை சேர்ந்த முஸ்தபா என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெங்களூரு நகரில் ஐடி பிரெஷ் புட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். முதல் ஆறு ஆண்டுகள் தன்னுடைய சொந்த முதலீட்டிலே நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.   
 
தற்போது இந்தியா முழுவதும் சுமார் 9 நகரங்களில் தன்னுடைய கிளைகளை நிறுவியுள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 இட்லி மற்றும் தோசை மாவு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் கூட சுமார் 1500க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
 
இதன்மூலம் ஐடி உணவு உறபத்தி நிறுவனம் தற்போது சுமார் ரூ.60 கோடி வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்