சென்னைக்கு இது கடைசி மழை இல்லை.. இன்னும் மழை இருக்குது: தமிழ்நாடு வெதர்மேன்..!

Mahendran

புதன், 18 டிசம்பர் 2024 (11:55 IST)
வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னைக்கு இது கடைசி மழை இல்லை என்றும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு பிறகு இன்னும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அடுத்த சில மணி நேரங்களில் வடசென்னை தொடங்கி நகரின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மழைக்கு காத்திருக்காமல் மாணவர்கள் பள்ளிகளுக்கும் அலுவலர்கள் அலுவலகத்திற்கும் தவறாமல் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரத்தில், சென்னைக்கு இது கடைசி மழையாக இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு அதாவது டிசம்பர் 26, 27 ஆகிய நாட்களில் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த மாதம் கடைசி வரை பெய்யும் மழை தான் குடிநீர் ஆதாரங்களுக்காக அதிக நீர் வரத்தை கொடுக்க போகிறது என்றும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்