ஏர்டெல் ஜியோவை அதிரவைக்கும் பி.எஸ்.என்.எல். ஆஃபர்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (15:18 IST)
ஏர்டெல், ஜியோவை தொடர்ந்து பி.எஸ்.என்.எல் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.


 

 
ஜியோவின் அறிமுகம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜியோவின் இலவச கால்கள் மற்றும் 4ஜி இணைய சேவை ஆகியவை மூலம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மலிவு விலை சேவை மற்றும் இலவசங்களை வழங்கி வருகின்றனர்.
 
தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டி போட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வருகின்றனர்.
 
ஜியோ நிறுவனம் அண்மையில் இலவச மொபைல் போன் வழங்குவதாக அறிவித்தது. அதற்கான முன்பதிவும் முடிந்துவிட்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் அதன் மலிவு விலை மொபைல் போனை அறிமுகம் செய்ய திட்டுமிட்ட்டுள்ளது. விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் மலிவு விலை ஸ்மார்ட்போன் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்