தலைவா பின்னிட்ட போ...!! ஜியோவை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்....

சனி, 7 டிசம்பர் 2019 (12:11 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ட்ரூலி அன்லிமிட்டெட் மூன்று புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 
 
வாடிக்கையாளர்களை இலவசம் மூலம் கவர்ந்த ரிலையன்ஸ் ஜியோ, திடீரென வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக அறிவித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. 
 
இந்நிலையில், ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த மூன்று சலுகை குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
 
1. ரூ. 219 பிரீபெயிட் சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
2. ரூ. 399 சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
3. ரூ. 449 சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 90 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
புதிய சலுகைகள் தவிர ஏர்டெல் வழங்கி வரும் மற்ற அன்லிமிட்டெட் சலுகைகளுக்கும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை. இந்த  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் இன்று (டிசம்பர் 7) முதல் வழங்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்