ஜீயோவிற்கு போட்டியாக ஏர்டெல்: தீபாவளிக்கு அசத்தல் சர்ப்ரைஸ்!!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (13:59 IST)
ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ரூ.1,500 விலையில் வழங்கும் 4ஜி பீச்சர் போன் திட்டத்திற்கு போட்டியாக புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.


 
 
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் சொந்தமான 4ஜி ஸ்மார்ட்போனை தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
லாவா மற்றும் கார்பன் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு ஜியோ போனுக்கு போட்டியாக உள்ளது. ஏர்டெல் போன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை டவுன்லோடு செய்யும் வசதி கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்