ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து லட்சக் கணக்கில் பணம் மாயமானதாக புகார்கள் எழுந்துள்ளது.
மத்திய அரசு வலியுறுத்தலின் படி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் இருந்து லட்சக் கணக்கில் பணம் மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி மற்றும் அதிலிருந்து மாயமான தொகை குறித்த விவரம்
ஆந்திரா வங்கி - ரூ.4,20,098
சிண்டிகேட் வங்கி - ரூ.1,21,500
யூகோ வங்கி - ரூ.92,250
எஸ்.பி.ஐ வங்கி - ரூ.80,500
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 5,89,000
தேசிய தனிநபர் அடையாள ஆணையம் வழக்கம் போல் எவ்வித தகவல்களும் திருடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகளின் இணையதள சேவைகள்தான் பணம் மாயமானதற்கு பொறுப்பு என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.