90% ஆஃபர்: பிளிப்கார்டின் 'பிக் 10 சேல்' அதிரடி!!

Webdunia
திங்கள், 15 மே 2017 (13:39 IST)
இ-காமர்ஸ் வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்-க்குக் கடுமையான போட்டியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இரு நிறுவனங்களும் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.


 
 
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி, மே 14 முதல் 18 வரையில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
 
பிளிப்கார்ட் நிறுவனம் துவக்கத்தில் புத்தகங்களை விற்பனை செய்யத் துவங்கினாலும், கடந்த 6 வருடங்களாக எலக்ட்ரானிக் பொருட்களை முக்கிய வர்த்தகப் பிரிவாகக் கொண்டு இயங்கி வருகிறது. 
 
பிளிப்கார்ட் நிறுவனம் நடத்தும் 'பிக் 10 சேல்' விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் அனைத்து பொருட்களுக்குசம் சுமார் 90 சதவீதம் வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்