24X7 மனி டிரான்ஸாக்‌ஷன்; 8 மணி நேரத்தில் NEFT-க்கு அமோக வரவேற்பு!!!

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (13:18 IST)
என்.இ.எஃப்.டி மூலம் 24 மணி நேரமும் பண பரிவர்த்தணை செய்யலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து இதனை பலரும் பயன்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
வங்கிக் கணக்கிலிருந்து ரொக்கமாக பரிவரத்தனை செய்யாமல், ஆன்லைனில் பரிவத்தனை செய்யும்போது ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் என்.இ.எஃப்.டி (RTGS & NEFT) ஆகிய முறைகள் பயன்படுகின்றன.  
 
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக என்.இ.எஃப்.டி மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இது அமலுக்கு வந்த நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை 11,40,000 பரிவர்த்தணைகள் நடைபெற்றுள்ளது என ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. 
 
விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இனி என்.இ.எஃப்.டி மூலம் பண பரிவர்த்தணை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்