புதுச்சேரியில் சர்வேயர் பணி

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (19:02 IST)
புதுச்சேரி அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் மற்றும் நில பதிவேடு துறையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்ப 12ஆம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Field Surveyor
 
காலியிடங்கள்: 16
 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
 
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Draughtsman (Civil) பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Autocad (Civil) பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடி
த்திருக்க வேண்டும்.
 
கடந்த 5 வருடங்களாக புதுச்சேரியில் வசிப்பவராக இருக்க வேண்டும். அதற்குரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பிக்கும் முறை: www.ercruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2015
 
முழுமையான விவரங்கள் அறிய www.ercruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்