சென்னையில் தமிழக அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2015 (21:11 IST)
தனியார் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசு சார்பாக வரும் சனிக்கிழமை சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள துறைமுக மைதானத்தில் நடைபெறுகிறது.
 
சிறப்பு வேலைவாய்ப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முறை சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை துறைமுக மைதானத்தில் வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று 20 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
 
வெளிநாடுகளுக்குச் சென்று வேலைபார்க்க விரும்புவோர் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிருவனத்தின் சேவையை வேலை வாய்ப்பு முகாமில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுயதொழில் குறித்து ஆலோசனையும் நடத்தபட இருக்கிறது. பெறலாம்.
 
சனிக்கிழமை நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.