21/21 மாநகராட்சிகளை கைப்பற்றும் திமுக!!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:22 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சிகளில் கட்சிகளின் முன்னிலை விவரம் வெளியாகியுள்ளது.
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி 138 நகராட்சிகளில் 110 இடங்களுக்கான முன்னிலை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக 98 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
 
மேலும், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. அதாவது சென்னை, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திண்டுக்கல், சிவகாசி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், ஒசூர் ஆகிய 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்