ஆஸ்துமாவினால் ஏற்படும் தொந்தரவு குறைய வைத்திய குறிப்புகள்...!!

Webdunia
நுரையீரலை பாதிக்கக் கூடிய நோய்களில் முக்கிய அங்கம் வகிப்பது சுவாசகாசம் நோயாகும். இதனையே ஆங்கிலத்தில் ஆஸ்துமா என்று கூறுவர். இது நாள்பட்ட நோயாக கருதப்படுகிறது. இந்நோயானது பொதுவாகக் குழந்தை பருவத்திலும், வெகு சிலருக்கு நடுத்தர பருவத்திலும்  ஆரம்பமாகும். 
சுற்றுச்சூழலில் உள்ள ஒரு சில காரணி களினால் தூசு, மாசு படிந்த காற்று, பூக்களில் உள்ள மகரந்தங்கள், புகை ஆகியவற்றாலும், மருந்துகளாலும், நாம் வசிக்கும் வீடுகளில் உள்ள சில காரணிகளாலும், ஏன் மேலும் நமக்கு ஒவ்வாத சில பொருட்களாலும், இவை ஏற்படும்.
 
பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை, காட்டுக் கோரை கிழங்கு. இந்த பத்தையும் ஒன்றாக கலந்து தினமும் உண்டால். ஆஸ்துமா வெகு விரைவில் குணம் ஆகும். 
 
ஒரு பிடி துளசியைச் சாறு எடுத்து அச்சாற்றை இரண்டு பாலாடை வீதம் மூன்று வேளையும் சாப்பிட முதியவர்களுக்கு ஏற்படும் சுவாசத் தடை இறுகித் தொல்லை தரும் சளி, கபம், கோழை, மெல்லிய நீர் போன்ற சளி ஆகியவை குணமாகும்.
 
தோலுரித்த வெள்ளைப் பூண்டு நான்கினை எடுத்து பாலில் போட்டு வேகவைத்து, பூண்டை சாப்பிட்டு பாலையும் குடித்துவிட குளிர்காலத்தில் அதுவும் இரவு நேரங்களில் ஏற்படும் ஆஸ்துமா தொந்தரவு குறையும்.
 
திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை எடுத்து அரைத்து நீர் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி அரை தேக்கரண்டி எடுத்து தேன் சேர்த்து நான்கு நாட்கள் உண்ண சுவாசகாசத்தில் ஏற்படும் சளிக்கட்டு குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்