எள்ளில் இருக்கும் செம்பு, கால்சியம், மெக்னிசியம் சத்துக்களால் மூட்டுகளில் உண்டாகும் வலியை எளிதாக சீர் செய்கிறது. இதில் உள்ள செம்பு சத்தானது இரத்த குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை அதிக படுத்துகிறது. இதனால் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
எள்ளில் வைட்டமின் எ மற்றும் பி இரும்பு சத்துகள் அதிகமாக இருப்பதால் இளநரை, முடி கொட்டுதல், மற்றும் நியாபக மறதி போன்றவற்றை விரைவாக குணப்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சு பொருள்கள் மற்றும் கழிவு பொருள்களை எளிதில் வெளியேற்றுகின்றது. இதன் மூலம் புற்றுநோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள எள் ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது.
வெள்ளை மற்றும் கருப்பு எள்களில் கருப்பு எள்ளே சிறந்தது. ஏனென்றால் இதில் மட்டும் கால்சிம் 60% அடங்கியுள்ளது. அதே போல் எள் அதிகமாக எடுத்து கொள்ளாமல், தினசரி உணவில் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தி வந்தால் வளமான வாழ்வை பெறலாம்.