உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (16:29 IST)
எந்த ஒரு நோய்க்கும் நிரந்தர தீர்வை தேட வேண்டுமே ஒழிய தற்காலிகமான தீர்வை நாடக் கூடாது. ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் முதலில் அந்த நோயின் தொடக்கத்தையும், அதன் மூலகாரணத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும். நோயின் மூல காரணத்தை அறியாமல் யாராலும் எந்த நோயையும் குணப்படுத்த இயலாது.


வலியோ தொந்தரவோ இருக்கும் இடத்தில் தான் நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. தொந்தரவுகள் உண்டான உடன் தான் நோய் தோன்றியது என்று அர்த்தம் கிடையாது. சிறுவயது முதலாக சிறிது சிறிதாக சேர்ந்த கழிவுகளே பின்னாளில் உடலில் தொந்தரவாக வெளிப்படுகின்றன.

உடலில் சேரும் கழிவுகளே உடல் உறுப்புகளின் இயக்கத்தை தடுக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன. உடலில் சேரும் கழிவுகளே அனைத்து வலிகள், இயலாமை, தொந்தரவுகள் மற்றும் நோய்களுக்கு மூல காரணமாக இருக்கின்றது.

உடலில் சேரும் கழிவுகளே அனைத்து உபாதைகளுக்கும் மூல காரணமாக இருப்பதனால், அந்த கழிவுகளை வெளியேற்றுவதும், புது கழிவுகள் உடலில் சேராமல் தடுப்பதுமே மருத்துவமாக இருக்க வேண்டும்.

எந்த வைத்தியம் செய்தாலும், ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, யுனானியோ, ஹோமியோபதியோ, அக்குபஞ்சரோ, எந்த மருத்துவமாக இருந்தாலும், அவர்கள் செய்யும் ஒரே மருத்துவம் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

உடலின் நோய்களை குணப்படுத்த உடலால் மட்டுமே முடியும். கழிவுகளை மட்டும் வெளியேற்றிவிட்டால் போதும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும். கழிவுகள் உடலில் சேர முக்கிய காரணமாக இருப்பது இரண்டு. ஒன்று செரிமானம் கோளாறு மற்றொன்று மலச்சிக்கல். இவை இரண்டையும் ஒழுங்குப்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்