கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலக சாலையில் பேரணி!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:19 IST)
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்களின் பல்வேறு சிரமங்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி ஆட்சி தலைவர்களிடம் மனு அளிப்பது மற்றும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தமிழகத்தில் உள்ள 4400 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் விற்பனையாளர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பது குறித்து ஏற்கனவே தொழிற்சங்கத்தால் முடிவு செய்யப்பட்டது.
 
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 170 சங்கங்களின் பணியாளர்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் 700 பேர் இன்று மதுரையில் உலக தமிழ் சங்க வளாகத்தில் இருந்து பேரணியாக வந்தனர் குறிப்பாக பயிர்க்கடன்,நகை கடன் மற்றும் மகளிர் சுயஉதவிகுழு கடன் தள்ளுபடி தொகைகளை முழுமையாக வட்டியுடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.
 
கடன் தள்ளுபடியில் விதிமீறல் நகை கடன் ஏல நடவடிக்கைகளில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களின் ஓய்வு கால பலன்களை நிறுத்தி பழி வாங்குவது கைவிடப்பட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்