8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா? - இலங்கைக்கு எதிராக பேட்டிங் தேர்வு!

Prasanth Karthick
ஞாயிறு, 28 ஜூலை 2024 (14:56 IST)

இலங்கையில் நடந்து வரும் ஆசியக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இன்று இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன.

 

 

இதுவரை ஆசியக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த ஆண்டு போட்டியிலும் ஆரம்பம் முதலே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த இறுதி போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதுகிறது.

 

இதில் தற்போது டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 8வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

 

இந்திய மகளிர் அணி : ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, உமா செட்ரி, ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமியா ரொட்ரிகஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், தனுஜா கன்வார், ரேணுகா சிங்

 

இலங்கை மகளிர் அணி : விஷ்மி குனரத்னே, சமாரி அதபத்து, கவிஷா தில்ஹாரி, நிலக்‌ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, ஹாசினி பெரேரா, சுகந்திக குமாரி, இனோஷி பிரியதர்ஷினி, உதேஷிகா ப்ரபோதனி, சச்சினி நிசான்சலா, 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்