இந்தியாவில் நடக்கும் டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை… உத்தரவாதம் கேட்கும் பாகிஸ்தான்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (10:22 IST)
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்வது தொடர்பான உத்தரவாதத்தைக் கோரியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

கொரோனா காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கொப்பைத் தொடர் 2022 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 7 ஆவது உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்வது தொடர்பான உத்தரவாதத்தை ஐசிசி மற்றும் பிசிசிஐ அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக இரு நாடுகளும் ஐசிசி தொடர்கள் தவிர மற்ற தொடர்களில் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்படுமா என்பது குறித்து ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்