இந்த ஆட்டத்துல அவங்க இல்ல; ஒயிட்வாஷ் ஆகாம ஜெயிக்கணும்! – இந்தியாவுக்கு கடைசி வாய்ப்பு!

செவ்வாய், 1 டிசம்பர் 2020 (08:52 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் வெளியேறுவதால் இந்தியா வெற்றிபெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான சுற்றுபயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஒருநாள் போட்டிகள் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் காயம் காரணமாக கடைசி போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு ஆல்ரவுண்டரான பேட் கம்மின்ஸும் இறுதி ஆட்டத்தில் விளையாடவில்லை. இரு முக்கிய வீரர்கள் இறுதி ஆட்டத்தில் இல்லாதது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதி போட்டியில் வெல்வதால் இந்தியா தொடரை வெல்ல முடியாவிட்டாலும் ஒயிட்வாஷ் ஆவதையாவது தடுக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்