கோலியைப் பாத்துக் கத்துக்கோங்க… இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (12:14 IST)
அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது. அந்த அண்யின் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதமடித்தார்.

முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது. அதை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் கோலி செய்த ஒரு செயலை கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அதில் “இரண்டாவது டெஸ்ட்டில் கோலி ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால் அவர் உடனடியாக வலைப்பயிற்சிக்கு சென்றார். அவர் இந்தியாவுக்காக விளையாடுவதை பெருமையாகக் கருதுகிறார. கோலி செய்ததை மற்ற வீரர்களும் செய்யவேண்டும் என நான் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்