உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக முடிந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவோடு5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை.
இந்த போட்டியில் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகியுள்ளதால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.