தமிழ்நாடு பிரிமீயர் லீக்போட்டியின் லீக் சுற்றுபோட்டிகள் இன்றுடன் (செப்.14) முடிவடைகின்றன.
8 அணிகள் பங்கேற்றுள்ள டிஎன்பிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 24 ம் தேதி தொடங்கியது. சென்னை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திருநெல்வேலி உள்ளிட்ட மூன்று இடங்களில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன.
கடைசி லீக் போட்டியில் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி காரைக்குடி காளை அணியை எதிர் கொள்கிறது. முதல் அரையிறுதி வெள்ளிக்கிழமை (செப். 16) நெல்லையிலும், இரண்டாவது அரையிறுதி சனிக்கிழமை (செப்.17) சென்னையிலும் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டி ஞாயிறன்று (செப்.18) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.