மீண்டும் தொடங்கும் டி-20 ஐபிஎல் தொடர் !

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (19:27 IST)
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இந்தியாவில் ஐபிஎல் - 2021 14 வது சீசன் திருவிழா தொடங்கியது. இத்தொடர் மே மாதம் 2 ஆம் தேதி வரை 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில்  சில வீரர்கள் கொரோவால் பாதிக்கப்பட்டனர் அப்போது இந்தியாவில் கொரொனா இரண்டம அலை வேகமாகப் பரவி வந்ததால் வீரர்களின் நலத்தைக் கவனத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

இதையத்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பி அனுப்பப்பட்டனர்.  தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.,

எனவே இப்போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐகூறியது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் கடந்த முறை நடைபெற்றது போன்று துபாய் , அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட இடங்களில் வீரர்களுக்கு தகுந்த பாதுக்காப்பு நடைமுறைகளுடன் போட்டிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்