என் திறமையை நிரூபித்துதான் அணியில் இடம்பிடித்தேன் – யுவ்ராஜினின் குற்றச்சாட்டுக்கு ரெய்னா பதில்!

Webdunia
புதன், 27 மே 2020 (07:33 IST)
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது தோனி ரெய்னாவை அணியில் கொண்டுவரவே அதிகம் விரும்பினார் யுவ்ராஜ் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. இந்நிலையில் ஓய்வுக்குப் பின் அவர் பல அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அதில் முக்கியமான ஒன்றாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது தன்னை விட அணியில் ரெய்னாவைக் கொண்டுவரவே தோனி மிகவும் விரும்பினார். ஒவ்வொரு கேப்டனும் தனக்குப் பிடித்த வீரர்களையே அணிக்குள் கொண்டு வர விரும்புவார்கள் எனக் கூறியிருந்தார். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது ரெய்னா அதற்கு பதிலளித்துள்ளார்.

யுவ்ராஜின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ரெய்னா ‘தோனி எனக்கு தெரிவித்தது, என் திறமையை நம்பிதான். அந்த நம்பிக்கையை நான் உண்மையும் ஆக்கினேன். தோனி எப்போதும் ஒருவருக்கு 2 போட்டிகளில் வாய்ப்பளிப்பார். அதில் திறமையை நிரூபிக்காவிட்டால் அணியில் இருக்க முடியாது. அந்த வகையில் தான் நானும் தோனியிடம் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்று, அதில் என்னை நிரூபித்தேன்.மிடில் ஆர்டரில் விளையாடுவதில் நிறைய சவால்கள் இருந்தாலும் அதை நான் விரும்பினேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்