மாட்டுச் சாணத்தால் அதிர்ஷ்டம்: பிரபல கிரிக்கெட் வீரரின் கதை!

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (15:49 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதல் கறுப்பினவீரர் மகாயா நிடினி அனைத்து வெளிநாட்டு பயணத்தின் போதும் தன்னுடன் ஒரு பிளாஸ்டிக் பையில் மாட்டுச்சாணத்தை கொண்டு செல்லும் பழகத்தை வைத்துள்ளார். 
 
கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி பெர்த்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நிடினி தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகமானார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி நிடினி தனது ஓய்வை அறிவித்தார்.
 
இந்நிலையில் அவர் போட்டியின் மோது மாட்டுச் சாணத்தை ஏன் எடுத்துச்செல்கிறார் என பதில் அளித்துள்ளார். மிகச்சிறிய கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்த்தால் காலில் செருப்பு, ஷூ வாங்குவதற்குக் வசதி இல்லை. எனவே, காலைநேரத்தில் பனிக்காலத்தில் வெளியே செல்லும்போது, மாடு சாணமிட்டுள்ள இடத்தில் அதன் மீது காலை வைத்துச் செல்வேன். அப்போது அதன் கதகதப்பு எனக்கு செருப்புபோல் இருக்கும். 
 
அதேபோல் எப்பொழுதும் என்னுடன் ஒரு பிளாஸ்டிக் பையில் மாட்டுச் சாணத்தை உடன் எடுத்துச் செல்வேன். அது என்னுடைய அதிர்ஷ்டம். எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், களத்தில் நன்றாகப் பந்துவீச முடியாவிட்டால், ஓய்வு அறைக்குச் சென்று நான் மாட்டுச் சாணத்தை முத்தமிட்டு, முகர்ந்து பார்ப்பேன்.  
 
அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போது என்னால் சரியாக செயல்படமுடியாவிட்டால், எனது பையில் இருக்கும் சாணத்தை சிறிது எடுத்து முகத்தில் தேய்த்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்