உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நான் பார்க்க மாட்டேன்… தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:29 IST)
நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது.  அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில் நிலைத்து நின்ற டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் போராடி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி வரை தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பின்வரிசை பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி இலக்கை எட்டினர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி பற்றி பேசும்போது “நான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நான் பார்க்க மாட்டேன். நான் அந்த போட்டியை பார்ப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம்தான் உள்ளது. ஆனாலும் போட்டி இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வென்றால் அது பொருத்தமானதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்