தகாத வார்த்தையால் நடுவரை திட்டிய இளம் கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (16:23 IST)
அவுட் கேட்டு கொடுக்காததால் வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் நடுவரை தகாத வார்த்தையால் வசைபாடியுள்ளார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
 
வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி தொடர் நடந்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றாலும், ஒரு கட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெரும் சூழல் நிலவியது.
 
அப்போது வங்கதேச பந்துவீச்சாளர் சபீர் ரஹ்மான் வீசிய பந்து ஆஃப்கான் வீரரின் கால் பேடில் பட்டது. இதனால் சப்ப்ர் ரஹ்மான் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சபீர் ரஹ்மான் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
 
வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியதால் அவர் மீது போட்டி நடுவரிடம் மைதான நடுவர் புகார் அளித்தார். பின்னர் சபீர் ரஹ்மான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்த கட்டுரையில்