1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

Prasanth Karthick

ஞாயிறு, 19 மே 2024 (11:38 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி வென்று ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில் விராட் கோலி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.



ஐபிஎல் போட்டிகள் 2008ல் தொடங்கி 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் சேர்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணி கூட ஐபிஎல் கோப்பையை ஒருமுறை வென்றுவிட்ட நிலையில் ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை இன்னும் கனவாகவே உள்ளது. ஆனாலும் ஆர்சிபி அணி ஆண்டுதோறும் அதற்காக போராடி வருகிறது. அவ்வாறாக இந்த வருடமும் ஐபிஎல்லில் போட்டியிட்டு வரும் ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்று கடைசி இடத்தில் இருந்தது. ஆர்சிபி அணிதான் முதலில் வெளியேற போகும் அணி என பலரும் நினைத்த நிலையில் அந்த எண்ணத்தை பொய்யாக்கி அடுத்த 6 போட்டிகளிலும் தொடர் வெற்றியை பெற்று தற்போது ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளது.

ஆர்சிபியின் இந்த ஜீரோவிலிருந்து ஹீரோவான சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகத் தொடங்கியுள்ளது. மகளிர் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது ஆர்சிபி மகளிர் அணியினர் இடையே பேசிய விராட் கோலி “உங்களுக்கு வெற்றி பெற ஒரு சதவீதம்தான் வாய்ப்பு இருக்கிறதென்றால், அதுவும் நல்ல விஷயம் தான். நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும் ஒன்றை பத்தாக்க வேண்டும். பத்தை முப்பது ஆக்க வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும்.

நான் ஆர்சிபி அணிக்காக 16 ஆண்டுகளாக விளையாடுகிறேன். தொடர்ந்து தோற்றாலும் போராடும் எண்ணத்தை மட்டும் நான் கைவிட்டதே இல்லை” என்று பேசியிருந்தார். தற்போது ஆர்சிபி கோப்பை கனவை நெருங்கியுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

From 1% to 100%
This is Craziest Reaction from Fans, Hope they will Lift the Trophy this year
No RCB fan's will pass without liking this post ❤️#RCBvsCSK #ViratKohli #Bengaluru pic.twitter.com/02fxHg7qMc

— * (@MH_Berlin_) May 19, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்