ரிஷப் பண்ட் கம்பேக்கில் அவசரப்படக் கூடாது… சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (06:54 IST)
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பயிற்சி ஆட்டங்களில் கலந்துகொள்ள தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு திரும்புவார் என்றும் அவரே கேப்டனாக செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முனனாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அதில் “ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியுடன் இருந்தால் அவருக்குக் கண்டிப்பாக கேப்டன்சி பொறுப்பை கொடுக்கலாம். அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடும் சீசன். அதனால் பின்னடைவை சந்திக்கும் எந்த விஷயத்தையும் நாம் செய்துவிடக் கூடாது. நாம் இதற்கு முன்பாக பார்த்த ரிஷப் பண்ட்டாக அவர் இருக்கப் போவதில்லை. அவர் மீண்டு தன்னுடைய ஃபார்முக்கு திரும்ப கடுமையாக போராட இருக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர் பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் என்பதே மகிழ்ச்சியான செய்திதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்